search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் கிரிவலம்"

    • வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் குவிந்தனர்
    • பல்லக்கில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
    • புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை உச்சியில் பழமை வாய்ந்த பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர். அவர்கள் பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மன் சிலைகளை பல்லக்கில் சுமந்தபடி பக்தி பாடல்களை பாடி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.

    • வருகிற 16-ந்தேதி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா
    • வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை திரும ணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கம், திருமணி நாயகி தாயார், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகர், அகத்தியர் ஆகிய மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் ஆனந்தன் ஐயர் தலைமையில் நடந்தது.

    அதைத் தொடர்ந்து சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் தலைமையில் பக்தி பாடல்கள் பாடியபடி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து பக் தர்கள் வந்து கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டு பெருவிழாவை யொட்டி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா நடக்கிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

    • ஆடி பவுர்ணமியையொட்டி வழிபாடு
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10. 20 மணிக்கு தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை உள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியையொட்டி வேலூர், சென்னை, பெங்களூர், சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×